அதிகார இருப்பை தக்கவைக்க கருத்துச் சுதந்திரத்திற்கு தடை விதிக்கும் அரசு!

16 view
சுதந்திர, ஜனநாயக நாடொன்றில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்குமான உரிமை என்பது இன்றியமையாததாகும். அவ்வாறிருக்கையில் அரசாங்கமொன்று அந்த உரிமையை மட்டுப்படுத்துமேயானால், அதன்மூலம் மக்களின் அபிலாஷைகளைவிடுத்து வெறுமனே அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதை மாத்திரம் இலக்காகக்கொண்டு செயற்படுகின்ற ஆட்சியாளர்களின் தன்மையே வெளிப்படுகின்றது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். அதுமாத்திரமன்றி இந்நாட்டு மக்கள் அனைவரினதும் ஒட்டுமொத்த அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைதியான முறையில் செயற்பட்ட இளம் போராட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மக்கள் போராட்டத்தில் முன்னணி செயற்பாட்டாளராகத் திகழ்ந்த பிரபல நடிகை தமிதா அபேரத்ன கடந்த புதன்கிழமை கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நடிகை தமிதா அபேரத்னவின் கைது குறித்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில்…
The post அதிகார இருப்பை தக்கவைக்க கருத்துச் சுதந்திரத்திற்கு தடை விதிக்கும் அரசு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース