கோட்டாவுக்கு உத்தியோகபூர்வ இல்லம்; பாதுகாப்புக்கு சிறப்பு படையணி!
33 view
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டிலிருந்து சென்ற பின்னர் பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்க்ஷ ஆகியோர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். மாலைதீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் 50 நாட்களை கழித்த பின்னர், கோட்டாபய ராஜபக்க்ஷ இவ்வாறு நேற்று (2) இரவு 11.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அதன் பின்னர் அங்கிருந்து அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (3) அதிகாலை 12.50 மணிக்கு, கொழும்பு 7 , பெள்ளாலோக்க மாவத்தைக்கு முகப்பாக அமைந்துள்ள மலலசேகர மாவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு இல்லத்துக்கு வருகை தந்தார். ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை பிரகாரம் இதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாடு திரும்பிய நிலையில் , அவருக்கு கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தைக்கு முகப்பாக மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள அரச…
The post கோட்டாவுக்கு உத்தியோகபூர்வ இல்லம்; பாதுகாப்புக்கு சிறப்பு படையணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டாவுக்கு உத்தியோகபூர்வ இல்லம்; பாதுகாப்புக்கு சிறப்பு படையணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
