வடமாகாணத்தில் 4 வைத்தியசாலைகளுக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர்கள் நியமனம்
36 view
யாழ், செப் 3 வடமாகாணத்திலுள்ள 4 வைத்தியசாலைகளுக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர்கள் மத்திய சுகாதார அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதன்படி யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியர் றேமன், ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்க வைத்தியர் திருமதி திலானி சேரலாதன், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வைத்தியர் சேரலாதன்(இவர் பதில் பணிப்பாளராகவம் கடமையாற்றவுள்ளார்) மேலும் மல்லாவி வைத்தியசாலைக்கு வைத்தியர் நிஷாந்தினி நியமனம் செய்யப்பட்டுள்ளார். குறித்த 4 வைத்திய அத்தியட்சகர்களுக்குமான பயிற்சிகளை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்திமற்றும் வடமாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் க.நந்தகுமார் ஆகியோர் வழங்கவுள்ளனர்.
The post வடமாகாணத்தில் 4 வைத்தியசாலைகளுக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர்கள் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாணத்தில் 4 வைத்தியசாலைகளுக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர்கள் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
