உருவாகியது ‘சுதந்திர மக்கள் சபை’
18 view
உருவாகியது ‘சுதந்திர மக்கள் சபை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றுட் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்தரப்பில் செயற்படும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ‘சுதந்திர மக்கள் சபை’ என்ற பெயரில் புதிய அரசியல் பயணத்தை இன்று (02) ஆரம்பித்துள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பிற்காக முன்னிற்பதை இலக்காகக் கொண்டு தம்மால் இந்த புதிய அரசியல் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். ‘சுதந்திர மக்கள் சபை’ அங்குரார்ப்பண நிகழ்வு வெள்ளிக்கிழமை (2) கொழும்பில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர்களான சன்ன ஜயசுமண, சரித ஹேரத், கலாநிதி நாலக கொடஹேவா, குணபால ரத்னசேகர, கலாநிதி உபுல் கலப்பதி, கலாநிதி திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாபா பண்டார, கே.பி.எஸ்.குமாரசிறி, லலித் எல்லாவல ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர். ‘சுதந்திர மக்கள் சபை’ அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து…
The post உருவாகியது ‘சுதந்திர மக்கள் சபை’ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உருவாகியது ‘சுதந்திர மக்கள் சபை’ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
