ரி-20 உலகக்கிண்ணம்: பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி அறிவிப்பு!
17 view
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க 15பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து விளையாடவுள்ள அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கெதிரான அணி விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லர், தனது முதல் உலகளாவிய தொடரில் தலைவராக அணியை வழிநடத்துகின்றனார். தேசிய அணி மற்றும் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹன்ட்ரெட் தொடரில் மோசமாக விளையாடிய பிறகு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேஸன் ரோய் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பில் சோல்ட்டை அணி நிர்வாகம் தேர்வுசெய்துள்ளது. பட்லர் தற்போது கால் காயத்தால் ஓய்வில் உள்ளார். ஆகையால் உலகக்கிண்ண தொடருக்கு முன்னர் நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கெதிரான 7 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், முன்னணி வீரரான மொயின் அலி அணியை வழிநடத்துவார்.பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் கடைசி கட்டத்தில் பட்லர் மீண்டும் உடற்தகுதி பெறுவார் என இங்கிலாந்து அணி நிர்வாகம்…
The post ரி-20 உலகக்கிண்ணம்: பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரி-20 உலகக்கிண்ணம்: பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
