எரிபொருட்களின் விலை குறைக்கப்படுகிறதா தற்போது வெளியான அறிவித்தல்!
9 view
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள்களின் விலை இன்று குறைக்கப்படுமா என்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.இதன்படி, எரிபொருள்களின் விலை இன்று குறைக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என்றும் அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.எவ்வாறாயினும், எரிபொருள் விலை சூத்திரம் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டாலும், எரிபொருள் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
The post எரிபொருட்களின் விலை குறைக்கப்படுகிறதா தற்போது வெளியான அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிபொருட்களின் விலை குறைக்கப்படுகிறதா தற்போது வெளியான அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
