பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வு!
32 view
யாழ்ப்பாணம், வண்ணார் பண்ணையில் உள்ள பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திறந்தவெளி அரங்கு நிர்மாணத்திற்காக அடிக்கல் நேற்று நடப்பட்டது. 1991 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த பழைய மாணவர்களால் 4.5 மில்லியன் செலவில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கிற்கான முதலாவது அடிக்கல் பாடசாலையில் கால் நூற்றாண்டு காலமாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் ஞானசூரியனால் நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்களால் இந்த அரங்கு நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
The post பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
