பொருளாதார நெருக்கடி அதிகரித்தால் மக்கள் வீதிக்கு இறங்கும் நிலை !

34 view
பொருளாதார நெருக்கடியின் போது குறைந்த வருமானம் பெறுபவர்களே பிரதானமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், அவர்களைப் பாதுகாப்பதற்கு சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்ஹ தெரிவித்தார். இந்நிலையில்,குறைந்த வருமானம் பெறுபவர்களுக்குப் பொருளாதார ரீதியான அசௌகரியங்கள் அதிகரித்தால் ஏழைகள் வீதிக்கு இறங்க நேரிடலாம் என்றும், இதனால் குழப்பமான சூழ்நிலை நாட்டில் ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, அதிக வருமானம் பெறும் மற்றும் குறைந்த வருமானம் பெறும் இரண்டு தரப்பினர் மத்தியிலும் ஏற்படுகின்றன பொருளாதார அசௌகரியங்கள் பிரிந்து செல்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டு, குறைந்த வருமானம் பெறுபவர்களின் அசௌகரியங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், கடன் பெறுவது கட்டுப்படுத்தப்பட்டு அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் தெரிவித்தார். தற்பொழுது காணப்படும் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின்…
The post பொருளாதார நெருக்கடி அதிகரித்தால் மக்கள் வீதிக்கு இறங்கும் நிலை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース