தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற டக்ளஸின் அறைகூவலுக்கு மாற்றுக் கட்சியினர் ஆதரவு
39 view
யாழ்ப்பாணம், ஓக. 30: வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் தரப்புகளை ஒன்றிணைத்து இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இதற்காக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்த பகிரங்க அழைப்புக்கு மாற்றுக் கட்சியினர் இடையே குறிப்பாக மாற்றுக் கட்சியின் இடைநிலை தலைவர்கள், உறுப்பினர்கள் இடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இது தொடர்பாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய இடை நிலைத் தலைவர் ஒருவர் எம்மிடம் கூறுகையில் “கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளின் தீர்வுக்கான தொடக்கமாக, 13 ஆம் திருத்த சட்டத்தை டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்திவருகிறார். அவரால் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தப்பட்டு வந்த 13 ஆம் திருத்தச் சட்டத்தை பிற கட்சிகள் வலுப்படுத்தி இருந்தால் பெரிய அழிவுகளை தடுத்திருக்க முடியும். இறுதி போரில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பை தடுத்திருக்க முடியும். ஆனால்,…
The post தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற டக்ளஸின் அறைகூவலுக்கு மாற்றுக் கட்சியினர் ஆதரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற டக்ளஸின் அறைகூவலுக்கு மாற்றுக் கட்சியினர் ஆதரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
