யாழில் போதைப்பொருள் எடுத்துக்கொண்ட இரு பெண்கள் கைது
52 view
யாழ், ஓக 30 யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த இரண்டு கிராம் போதைப் பொருளையும் கைப்பற்றினார். யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த இரண்டு பெண்களும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சாயிமேனன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டனர். 28 மற்றும் 29 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
The post யாழில் போதைப்பொருள் எடுத்துக்கொண்ட இரு பெண்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் போதைப்பொருள் எடுத்துக்கொண்ட இரு பெண்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
