அமெரிக்க செனட்டர் ஜோன் ஓசாஃப் தலைமையிலான குழு இந்தியா விஜயம்
7 view
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில், செனட்டர் ஜோன் ஓசாஃப் குழுவினர் நாளை(செவ்வாய்கிழமை) இந்தியாவிற்கு எட்டு நாள் விஜயமாக வருகை தரவுள்ளனர். இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தின் வரலாற்று நிகழ்வில் இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது அமெரிக்க செனட்டர் ஓசாஃப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ‘நம் நாடுகளுக்கிடையேயான நட்பை வலுப்படுத்தவும், அடுத்த தலைமுறை இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவும் நான் வருகிறேன்’ என ஓசாஃப் கூறினார். 35 வயதான ஓசாஃப், இளம் அமெரிக்க செனட்டர் ஆவார். அவரது அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த அமெரிக்க செனட்டர் ஜோன் ஓசாஃப் இந்தியாவுக்கு எட்டு நாள் பொருளாதாரக் உறுப்பினர்களுடன் வருகை தரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோர்ஜியாவில் உள்ள இந்திய அமெரிக்க சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவும் நாங்கள் பணியாற்றுவோம், அங்கு வளர்ந்து வரும் இந்திய புலம்பெயர்ந்தோர் எங்கள் சமூகத்தின் செழிப்பான மற்றும் அன்பான பகுதியாக உள்ளனர்’ என செனட்டர் ஓசோஃப் மேலும் கூறினார். அவர்,…
The post அமெரிக்க செனட்டர் ஜோன் ஓசாஃப் தலைமையிலான குழு இந்தியா விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்க செனட்டர் ஜோன் ஓசாஃப் தலைமையிலான குழு இந்தியா விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
