நீதி கிடைக்கும் வரை வீதியில் இறங்கிப் போராடுவோம்- சபையில் கஜேந்திரன் எம்.பி. எச்சரிக்கை!
6 view
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒரு பகைமையை ஏற்படுத்துவதற்கும் தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் ஒரு நிலைமையை உருவாக்குவதற்கும் ஒரு சில இனவாத முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தூண்டுதலின் அடிப்படையில் செயற்படுகின்றாரா?” இவ்வாறு கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேலும் கூறுகையில், ஒட்டுமொத்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்களையும் கொதித்தெழ வைக்கும் செயற்பாட்டில் அரசு ஈடுபட்டுள்ளது. கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக பிரிவானது 1989ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டில் அது பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு மேலாக அது ஒரு பிரதேச செயலகமாகச் செயற்பட்டு வருகின்ற நிலையில் இன்று வரைக்கும் அந்தப் பிரதேச செயலகத்துக்குரிய கணக்காளர் நியமனம் இடம்பெறவில்லை. அதற்காக மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்ற…
The post நீதி கிடைக்கும் வரை வீதியில் இறங்கிப் போராடுவோம்- சபையில் கஜேந்திரன் எம்.பி. எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீதி கிடைக்கும் வரை வீதியில் இறங்கிப் போராடுவோம்- சபையில் கஜேந்திரன் எம்.பி. எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
