சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் மீளாய்வு தேவை!
14 view
சிறிலங்கா சென்று திரும்பியுள்ள சீனாவின் யுவான் வாங் – 5 கப்பல் விவகாரம், சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீளாய்வு செய்ய வேண்டிய உடனடித் தேவையை காட்டுகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, உண்மையில் சிறிலங்கா யாருக்கு விசுவாசம் என்பதனையும் இவ்விடயம் வெளிக்காட்டியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. அவர்கள் அனுப்பிய செய்தி குறிப்பில், கடந்த ஓகஸ்ற் 22ம் நாள் இக்கப்பல் இலங்கைத் துறைமுகமான அம்பாந்தோட்டையிலிருந்து புறப்பட்டு விட்டாலும், இவ்விவகாரம் சிறிலங்கா தொடர்பில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பாதுகாப்பு – இராஜதந்திர நிலையில் கவலையினை ஏற்படுத்தியிருந்தது. 99 ஆண்டுகால குத்தகையில் சீனத்தின் கைகளில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் இருப்பது முக்கியமான மூலோபாய விளைவுகளைக் கருக்கொண்டிருக்கும் நிலையில், பன்னாட்டுச் சட்டம், இறைமை, பொருளியல் அச்சுறுத்தல் ஆகியவை பற்றி ஆய்வு நடத்த பெல்ஜியம்-பிரசெல்ஸில் உள்ள உலகப்புகழ் பெற்ற கடல்சார் சட்டநிறுவனம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமர்த்தியிருந்தது. அந்நிறுவனம் சமர்பித்திருந்த ஆய்வறிக்கையின் (https://tgte-us.org/wp-content/uploads/2022/08/Expert-Opinion_Hambantota-Port-Project.pdf) அடிப்படையில் யுவான் வாங்…
The post சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் மீளாய்வு தேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் மீளாய்வு தேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
