மின்வெட்டு நேரத்தினை குறைத்தது அரசாங்கம்
17 view
நாட்டில் நாளை(செவ்வாய்கிழமை) முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி முதல் 8.20 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
The post மின்வெட்டு நேரத்தினை குறைத்தது அரசாங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்வெட்டு நேரத்தினை குறைத்தது அரசாங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
