அமெரிக்காவில் அமிதாப்பச்சனுக்கு சிலை
39 view
அமெரிக்கா,ஓக 29 அமெரிக்காவில் வசிக்கும் அமிதாப்பச்சனின் தீவிர ரசிகர் ஒருவர் தனது வீட்டின் முன்பு அமிதாப்பின் முழு உருவ சிலையை அமைத்து அன்பை வெளிபடுத்தியுள்ளார். குஜராத்தை சேர்ந்த கோபி சேத் என்பவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அமிதாப் பச்சனின் தீவிர ரசிகரான கோபி சேத், ராஜஸ்தானில் இருந்து அமிதாப்பச்சனின் முழு உருவ சிலையை வடிவமைத்து, அமெரிக்காவில் உள்ள தனது இல்லத்தின் முன்பு அமைத்துள்ளார் பிரபலமான Big Boss நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் பங்கேற்றது போல் அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் இந்த சிலையை தாம் அமைத்துள்ளதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.
The post அமெரிக்காவில் அமிதாப்பச்சனுக்கு சிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்காவில் அமிதாப்பச்சனுக்கு சிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
