இலங்கை அரசுக்கு எதிராக சிங்களவர்கள் ஜெனிவாவில் போராட்டம்
6 view
இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும், அவசரகாலச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை வளாகத்தில் புலம்பெயர் சிங்களவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த காலங்களில் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராகத் தமிழ் மக்களே போராட்டம் நடத்துவது வழமை. அந்தக் காலப் பகுதிகளில் சிங்கள மக்கள், இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்தும், அதன் மனித உரிமை மீறல்களை ஆதரித்தும் போராட்டம் நடத்தி வந்தனர். முதல் தடவையாக இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பாவிலுள்ள புலம்பெயர் சிங்கள மக்கள் ஜெனிவாவில் போராட்டம் நடத்தியுள்ளனர். ‘அடக்குமுறையை நிறுத்து’ என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை அரசுக்கு எதிரான காலிமுகத்திடல் போராட்டச் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவதைக் கண்டித்தும், கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரியும் இந்தப் போராட்டத்தில் அவர்கள்…
The post இலங்கை அரசுக்கு எதிராக சிங்களவர்கள் ஜெனிவாவில் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை அரசுக்கு எதிராக சிங்களவர்கள் ஜெனிவாவில் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
