இலந்தையடி கடலரிப்பால் காணாமல் போகும் நிலங்களும், மரங்களும்!(படங்கள் இணைப்பு)
15 view
கற்பிட்டி, நுரைச்சோலை – இலந்தையடி பகுதியிலுள்ள கடற்கரையின் கரையோரப் பகுதிகள் கடலரிப்பினால் பாரிய இயற்கை அழிவுகளை எதிர்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கற்பிட்டி பிரதேச சபைக்குற்பட்ட நுரைச்சோலை – இலந்தையடி கடற்பிரதேசத்தில் சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் வரையிலான கடற்பகுதி இவ்வாறு கடலரிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். இதனால், மீன்பிடி படகுகள், வாடிகள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்கள் என்பனவும் இந்த கடலரிப்பினால் பெரும் பாதிப்பை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். அத்தோடு, கரையோரப் பகுதிகளில் மீன்பிடிப் படகுகளையும் நிறுத்தி வைக்க முடியாத சூழ்நிலையும் காணப்படுவதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.மேற்படி கடலரிப்பைத் தடுப்பதற்காக கரையோரப் பகுதிகளில் பாரிய கற்கள் போடப்பட்டுள்ள போதிலும், கடலைப்பின் தீவிரம் இதுவரை குறையவில்லை எனவும் இந்தப் பகுதியில் வாழும் மக்களும், மீனவர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன், சுனாமியிலிருந்து பாதுகாப்பை பெறுவதற்காகவும், கற்பிட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும் முன்னோர்களால் இலந்தையடி கடற்கரையோரப் பகுதிகளில் பாரிய அளவில் சவுக்கு மரங்கள்…
The post இலந்தையடி கடலரிப்பால் காணாமல் போகும் நிலங்களும், மரங்களும்!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலந்தையடி கடலரிப்பால் காணாமல் போகும் நிலங்களும், மரங்களும்!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
