வடக்கு, கிழக்குக்கென இடைக்கால நிர்வாகம்! – தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் பகிரங்க அழைப்பு
17 view
“வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் சூழல் தற்போது இல்லாத பட்சத்தில் அந்த மாகாணங்களை நிர்வாகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் உள்ள சகல அரசியல் தரப்புகளையும் ஒன்றிணைத்து இடைக்கால நிர்வாகம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.” இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமிழ்க் கட்சிகள் இது குறித்துப் பேசி தமக்குள் ஒரு பொது முடிவுக்கு வரவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் இதுவரை காலமும் தமக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நம் மக்களைக் கைவிட்ட வரலாற்றை நாங்கள் இனியும் தொடர முடியாது. அதனை மாற்றி அமைத்து எமக்குள் ஒரு ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி, அந்த ஒருமித்த நிலைப்பாட்டை மத்திய அரசின் தலைமைக்குக் கொண்டு வர…
The post வடக்கு, கிழக்குக்கென இடைக்கால நிர்வாகம்! – தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் பகிரங்க அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு, கிழக்குக்கென இடைக்கால நிர்வாகம்! – தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் பகிரங்க அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
