சஜித் அணியின் ஐந்து முக்கியஸ்தர்களுக்கு அமைச்சு பதவி?
6 view
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று இவர்கள் அமைச்சரவையில் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது. இவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் பலமிக்க அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வகட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் தேசிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் தற்போது தயாராகி வருகின்றது. இதற்கiமைய கட்சிகளாக இல்லாது தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என, பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, அமைச்சு பதவிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
The post சஜித் அணியின் ஐந்து முக்கியஸ்தர்களுக்கு அமைச்சு பதவி? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சஜித் அணியின் ஐந்து முக்கியஸ்தர்களுக்கு அமைச்சு பதவி? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
