திருச்சி முகாமில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளி!
14 view
தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் கந்தசாமி கிருஸ்ண குமார் என்ற முன்னாள் போராளி சில முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சிறப்பு முகாமின் நுழைவாயிலுக்கு அருகில் அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 22 ஆம் திகதி அவர் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் 5வது நாளாகவும் தொடர்ந்தும் தண்ணீர் கூட பருகாமல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்வைத்துள்ள கோரிக்கைகள் அடிப்படை உரிமையான பேச்சு தொடர்பு சாதனமான கைபேசியை திரும்ப வழங்க வேண்டும், உறவினர் பார்க்க வரும் போது கொரோனாவுக்கு முன்னர் இருந்த நடைமுறை போல் அனுமதி வழங்க வேண்டும்,சிறப்பு முகாமில் இருக்கும் 150 பேர் இருப்பதுடன் முகாமில் முதல் உதவி சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும், வழக்குகள் முடிந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கும் தினத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளவர்களுக்கு…
The post திருச்சி முகாமில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருச்சி முகாமில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
