இலங்கை வங்கி தலைவரை பதவி விலக வலியுறுத்தி போராட்டம்
17 view
கொழும்பு, ஓக 27 அரசியல்வாதிகளுடன் இணைந்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்தவை பதவி நீக்கக் கோரி இலங்கை வங்கி ஊழியர் சங்கம் நேற்று வெள்ளிக்கிழமை கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த இரண்டரை வருடங்களாக இந்த ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் எழுத்துமூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவிக்கின்றது. தலைவர் பொதுப் பணத்தை துஷ்பிரயோகம் செய்து இலஞ்சம் கொடுத்து பொது முகாமையாளருக்கு சுமார் 500 இலட்சம் ரூபா பெறுமதியான காரை 6 இலட்சம் ரூபாவிற்கு வழங்கியதை கணக்காய்வாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அந்தக் குற்றங்களை எதிர்த்தமையால் ஆத்திரமடைந்த தலைவர், கிளைச் சங்கத்துடன் வெறுப்புடன் செயல்படுவதோடு, வங்கியின் அமைப்பு முறையை அழிப்பதன் மூலம் கீழ்த்தரமான பழிவாங்கல்களை முன்னெடுப்பதாக, இலங்கை…
The post இலங்கை வங்கி தலைவரை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை வங்கி தலைவரை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
