லிஸ் ட்ரஸின் சர்ச்சையான கருத்து: மக்ரோன் பதில்!
6 view
அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் திகழும் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பதிலளித்துள்ளார். நார்விச்சில் நடந்த இறுதித் தலைமைத்துவக் கூட்டத்தில் உரத்த கரவொலி எழுப்பும் வகையில், ‘மக்ரோன் பிரித்தானியாவின் நண்பரா, பகைவரா என்பது குறித்து இனிதான் முடிவு செய்ய வேண்டும். அவரது சொல்லைவிட செயலைக் கொண்டுதான் முடிவெடுக்க முடியும்’ என கூறினார். அத்துடன், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ‘சொற்கள் அல்ல செயல்களால்’ அவரைத் கையாளுவேன் என்று அவர் மேலும் கூறினார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அல்ஜீரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த மக்ரோன் கருத்து தெரிவிக்கையில்,இதே கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால், நான் ஒரு நொடி கூட தயங்க மாட்டேன். பிரான்ஸ் பிரித்தானியா மக்களின் நண்பன் என கூறுவேன். பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா நண்பர்களா அல்லது எதிரிகளா என்று சொல்ல முடியாது என்பது நடுநிலையான…
The post லிஸ் ட்ரஸின் சர்ச்சையான கருத்து: மக்ரோன் பதில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லிஸ் ட்ரஸின் சர்ச்சையான கருத்து: மக்ரோன் பதில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
