யாழில் கடற்றொழில் வாடிகள் சற்று முன்னர் தீக்கிரை!
43 view
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் சற்றுமுன் மூன்று கடற்றொழில் வாடிகள் தீக்கிரையாகியுள்ளது. குறித்த வாடிகள் தீயில் எரிவதை பார்த்த மீனவர்கள் அதை அணைக்க முற்பட்ட முயற்சியும் தோல்வியடைந்த நிலையில் மூன்று வாடிகளும் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. சிறு தொழிலாளர்களின் சுமார் ஒரு கோடி பெறுமதிக்கு அதிகமான வலைகளும் மீன்பிடி உபகரணங்களுமே எரிந்து நாசமாகியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். செல்வா, மரியசீலன், ராசன் ஆகிய மீனவர்களின் வாடியே இவ்வாறு தீயில் எரிந்துள்ளது. குறித்த வாடிகள் எரிந்து நாசமாகியுள்ளதற்க்கான. காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் குறித்த தீ சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிற செய்திகள்
The post யாழில் கடற்றொழில் வாடிகள் சற்று முன்னர் தீக்கிரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் கடற்றொழில் வாடிகள் சற்று முன்னர் தீக்கிரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
