பன்மைத்துவக் கலாசாரத்தினூடாக மரபுரிமையை வளர்த்தலும் மதநல்லிணக்கத்தினை வலுப்படுத்தல் நிகழ்வு!

7 view
பன்மைத்துவக் கலாசாரத்தினூடாக மரபுரிமையை வளர்த்தலும்  மதநல்லிணக்கத்தினை வலுப்படுத்தலும் என்ற தொனிப்பொருளில்  திருகோணமலை சர்வமத இளையோர்களின் ஒழுங்கமைப்பில் இன்று (26)  சீனக்குடா – கவட்டிக்குடா ,கிராம சேவகர் பிரிவு அலுவலகத்தின் திறந்தவெளியில் இடம்பெற்றிருந்தது.  இதில் சர்வமதத்தின் மதத்தலைவர்கள் , சீனக்குடா மதத்தலங்களுக்கு பொறுப்பான நிர்வாக சபைமற்றும் கவட்டிக்குடா கிராம சேவகர் அதிகாரி,  அமரா சமாச உறுப்பினர்கள் , சீனக்குடா பொதுமக்கள் , இளையோர்கள், அத்துடன் திருகோணமலை முஸ்லிம் அறநெறிப் பாடசாலை, சீனக்குடா இந்துசமயஅறநெறிப்பாடசாலை, பௌத்த அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும்  இதில் பங்கேற்று தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கி இந்நிகழ்வினை சிறப்பித்திருந்ததோடு, உணவு பாரம்பரித்தின் அவசியம், ஒவ்வொரு சமயங்களும் உணவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை இந்நிகழ்வு பறைசாற்றியது என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை.  இத்தகைய நிகழ்வினை உரியநேரத்தில் ஒழுங்கமைந்த முறையில் மேற்கொள்ள எங்களோடு ஒன்றுசேர கைகோர்த்த அனைவருக்கும் விழுது சர்வமத இளையோர் சார்பாகவும், ஒழுங்கமைப்புக்குழு சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்து கொள்கின்றனர். பிற செய்திகள்
The post பன்மைத்துவக் கலாசாரத்தினூடாக மரபுரிமையை வளர்த்தலும் மதநல்லிணக்கத்தினை வலுப்படுத்தல் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース