காற்றாலை மின் செயல்திட்டத்துக்கு எதிரான போராட்டத்திற்கு மன்னார் மீனவ சங்கங்கள் ஆதரவு!
11 view
மன்னார் மாவட்டம் முழுவதும் வருகின்ற திங்கட்கிழமை பொது அமைப்புகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மேற்கொள்ள இருக்கின்ற விழிப்புணர்வு கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தங்களுடைய முழு ஆதரவையும் வழங்குவதாக மீனவ சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக மன்னார் மீனவர் சமாச செயலாளர் மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்,மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காற்றாலை கோபுரங்களாலும் அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து இடம் பெறும் கனிய வள மணல் அகழ்வு ஆய்வுக்காக இடம் பெறுவதாக சொல்லப்பட்டாலும் இன்று வரை 4000 துளைகளுக்கு மேல் போடப்பட்டுள்ளது. எனவே இவைகள் இரண்டு செயற்திட்டங்கள் தொடர்பாக மீனவ சமூகம் சார்ந்து தொடர்ச்சியாக போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் வெளிக்காட்டிய போதும் இந்த செயற்பாட்டை எங்களால் தடுத்து நிறுத்த முடியாத நிலையே இதுவரை காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் கடந்த வாரம் பிரஜைகள் குழுவினால் காற்றாலைக்கு…
The post காற்றாலை மின் செயல்திட்டத்துக்கு எதிரான போராட்டத்திற்கு மன்னார் மீனவ சங்கங்கள் ஆதரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காற்றாலை மின் செயல்திட்டத்துக்கு எதிரான போராட்டத்திற்கு மன்னார் மீனவ சங்கங்கள் ஆதரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
