சர்ச்சைக்குரிய கட்டுவன் மயிலிட்டி வீதியை திறந்து வைத்த இராணுவத் தளபதி!
16 view
யாழ்ப்பாணம், கட்டுவன் – மயிலிட்டி வீதியில் இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்த 480 மீற்றர் வீதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் புனரமைக்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவ தளபதி லித்தும் லியனகே குறித்த வீதியை திறந்து வைத்தார். குறித்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வலிகாமம் வடக்கில் சுமார் 30 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் ஒருதொகுதி கடந்த நல்லாட்சி அரசில் விடுவிக்கப்பட்டன. அதன்போது கட்டுவன் மயிலிட்டி வீதி விடுவிக்கப்பட்டு அதன் மேற்குப் புறமான மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட்டன. எனினும் இந்த வீதியில் இடையில் சுமார் 480 மீற்றர் வீதிப் பகுதி (மயிலிட்டி தெற்கில்) உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இருந்தது. அதனை முட்கம்பி வேலியால் மூடி வளைத்து வீதியின் ஏனைய பகுதியை விடுவித்தனர். இதனால் அருகில் உள்ள தனியார் காணி ஊடாக மக்கள் பயணித்தனர். இராணுவ முட்கம்பி வேலிக்கு…
The post சர்ச்சைக்குரிய கட்டுவன் மயிலிட்டி வீதியை திறந்து வைத்த இராணுவத் தளபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்ச்சைக்குரிய கட்டுவன் மயிலிட்டி வீதியை திறந்து வைத்த இராணுவத் தளபதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
