இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த யாழ் இளைஞன்!
14 view
இந்த வார இறுதியில் இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் கனிஸ்ரன் குணரட்ணம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கொழும்பு, கல்கிசை சென் தோமஸ் கல்லூரியின் உப தலைவராக சிறப்பாக செயற்பட்டிருந்த கனிஸ்ரன், அண்மையில் மாகாணங்களுக்கு இடையிலான இலங்கை 19 வயதிற்குட்பட்டோருக்கான சுற்றுப்போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி இறுதிப் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனிஸ்ரன் குணரட்ணம், யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களான Dr.ஹன்றி றோச் குணரட்ணம் மற்றும் Dr. சினோதயா குணரட்ணம் ஆகியோரின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது. பிற செய்திகள்
The post இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த யாழ் இளைஞன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த யாழ் இளைஞன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
