கொழும்பில் உள்ள பொலிஸாருக்கு பேஸ்புக்கை வேவு பார்க்கும் புதிய வேலை ஒப்படைப்பு
36 view
இப்போது முடிவுக்கு வந்து விட்டதாக நாம் நினைக்கும் “அரகல” என்ற போராட்டத்துடன் தொடர்பு உள்ளதா? என எனது கொழும்பு மாவட்ட மக்களின் முகநூல் கணக்குகளுக்கு சென்று, இன்று பொலிஸ் தேடுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் சபையில் இன்று தெரிவித்துள்ளார். வெள்ளவத்தையில் நான் அறிந்த என் நண்பர்களை குற்றப்பிரிவு பொலிஸ் அழைத்துள்ளது. இதுபற்றி பொறுப்பதிகாரியிடம் நான் வினவினேன். “இது மேலிடத்து கட்டளை ஐயா” என பொறுப்பதிகாரி பொறுப்பாக கூறுகிறார். நான் வன்முறையை வெறுக்கிறேன். வீடுகள் தீவைப்பு போன்றவற்றை நான் ஏற்கனவே இந்த சபையில் கண்டித்து விட்டேன். ஆனால் இது வன்முறை அல்ல. சாதாரண மக்கள் ஆர்வம் காரணமாக, சுற்றிப்பார்க்க ஜனாதிபதி மாளிகைக்கு போனார்கள். படம் எடுத்தார்கள். வீடியோ எடுத்தார்கள். இவை குற்றங்களா? இவர்களின் தொலைபேசி எண்களை தேடி பிடித்து, தகவல் அனுப்பி பொலிசுக்கு வருமாறு கூப்பிடுகிறீர்கள். இவர்கள் சாதாரண அப்பாவி மக்கள். ஜனாதிபதி மாளிகை “ஜிம்மில்” ஒரு போலீஸ்காரர் உடற்பயிற்சி செய்தார்.…
The post கொழும்பில் உள்ள பொலிஸாருக்கு பேஸ்புக்கை வேவு பார்க்கும் புதிய வேலை ஒப்படைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் உள்ள பொலிஸாருக்கு பேஸ்புக்கை வேவு பார்க்கும் புதிய வேலை ஒப்படைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
