தோட்ட தொழிலாளர்களின் அடுத்த சம்பள உயர்வுக்கான பணி ஆரம்பம் -செந்தில் தொண்டமான் அறிவிப்பு!
6 view
இ.தொ.கா முன்வைத்த 1000ரூபாய் சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி கம்பனிகள் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தன் மூலம் கம்பனிகளின் அடாவடித்தனத்துக்கு தக்க பாடத்தை இ.தொ.கா புகட்டியுள்ளதுடன், குறித்த அறிவிப்பு வெளியான மறுநிமிடம் முதல் அடுத்த சம்பள உயர்வுக்கான வேலைதிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த தொடர்ச்சியாக கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களால் அந்த காலத்திற்கு ஏற்ற வகையில் தோட்ட தொழிலாளர்கள் வாழ்வாதரத்தை முன்னெடுக்கும் வகையில் நியாயமான சம்பளமாக 1000 ரூபாய் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதில் எப்போதும் முன்னின்றே செயல்பட்டுள்ளார். பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சம்பளத் தொகையாகவும் அக்காலத்தில் 1000 ரூபாய் இருந்தது. ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அமரர் ஆறுமுகன் தொண்டமான் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில்…
The post தோட்ட தொழிலாளர்களின் அடுத்த சம்பள உயர்வுக்கான பணி ஆரம்பம் -செந்தில் தொண்டமான் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தோட்ட தொழிலாளர்களின் அடுத்த சம்பள உயர்வுக்கான பணி ஆரம்பம் -செந்தில் தொண்டமான் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
