மாயமான சிறுமி குகையிலிருந்து மீட்பு

14 view
லுணுகலை,ஓக 11 இந்த மாதம் 3ஆம் திகதி  லுணுகலை 27 ம் கட்டை பகுதியிலிருந்து  காணாமல் போன 14 வயது சிறுமியொருவர்  காட்டுப்பகுதியில் உள்ள குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இச்சிறுமியுடன் மேலும் இளைஞர் ஒருவரும் 58 வயது நபர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். லுணுகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், பல்லேகிருவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் 58 வயதுடைய லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் குறித்த சிறுமியும்  உடகிருவ- கொட்டிகல்கே காட்டுப் பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய, இன்று காலை விஷேட அதிரடி படையினர் மற்றும் லுணுகலை பொலிஸார் இனைந்து உடகிருவ காட்டுப்பகுதியில் தேடுதலை மேற்கொண்ட போது, குறித்த மூவரும் கற்குகை ஒன்றினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post மாயமான சிறுமி குகையிலிருந்து மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース