கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த வடக்கிற்கு விஜயம்!
6 view
கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தலைமையிலான உயர்மட்டக் குழு அடுத்த வாரம் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ங்களுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, கல்வி அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோருடன் கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரே எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சிக்கும், 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளனர். 18 ஆம் திகதி வியாழக் கிழமை, முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி, அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியின் வைபவ ரீதியான திறப்பு விழா இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 525 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட…
The post கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த வடக்கிற்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த வடக்கிற்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
