சீன கப்பலுக்கு அனுமதி வழங்கியது யார்?- மைத்திரி கேள்வி
44 view
சீன யுவான் வாங் 5 ஆய்வுக் கப்பலுக்கு வெளிவிவகார அமைச்சருக்குக் கூட அறிவிக்காமல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அனுமதி வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கிணங்க, இந்த பிரச்சினை நாடுகளுக்கு இடையில் நெருக்கடி நிலையை எட்டியதற்கு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளே பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்துகின்றார். இந்த கப்பல் கடந்த ஜூன் 28ம் தேதி இலங்கைக்கு வர அனுமதி கோரியது. இதன்படி, சேவை வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக ஜூலை 12 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் கப்பல் நுழைவதற்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், அந்த அனுமதி வழங்கப்படுவது குறித்து வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கவில்லை. அந்த அனுமதியின் பிரகாரம் இந்த கப்பல் சீனாவில் இருந்து இலங்கைக்கு சென்றுள்ளதாகவும், இந்தியாவின் அழுத்தம் காரணமாக, வெளிவிவகார அமைச்சு மீண்டும் ஆய்வுக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதை ஒத்திவைக்குமாறு கூறியுள்ளது. என முன்னாள் ஜனாதிபதி…
The post சீன கப்பலுக்கு அனுமதி வழங்கியது யார்?- மைத்திரி கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீன கப்பலுக்கு அனுமதி வழங்கியது யார்?- மைத்திரி கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
