முட்டை தொடர்பில் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
39 view
கொழும்பு, ஓக 10 முட்டையின் விலை உயர்வைக்கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்துகுறைந்த விலையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் தற்போது முட்டை ஒன்றின்விற்பனை விலை இலங்கைப் பெறுமதியில் சுமார் 18 ரூபாவாக உள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்து இந்த நாட்டில் ஒரு முட்டையை 20 ரூபாவுக்கு வழங்க முடியும்.தற்போது இங்கு ஒரு முட்டையின் விலை 58 தொடக்கம் 65 ரூபாவாக உள்ளது. முட்டை உற்பத்தியாளர்கள் மக்களைச்சுரண்டுவதற்கு இடமளிப்பதை அரசாங்கம்மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்ககூடாது என்றும் அந்தச் சங்கம்தெரிவித்துள்ளது.
The post முட்டை தொடர்பில் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முட்டை தொடர்பில் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
