சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு; இலங்கையிலிருந்து நீங்க தயாராகும் தூதரகங்கள்!
14 view
நாளை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கிவந்தடையவிருந்த யுவான் வாங்-5 கப்பலை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் துறைமுகத்துக்கு வருமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு, சீன தூதரகத்துக்கு அறிவித்துள்ளது. வாய்மொழி மூலம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமாறு மைத்ரிபால சிறிசேன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கான அனுமதி, ஜூன் 28 ஆம் திகதி விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான அனுமதி ஜூலை 12 வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதியயையடுத்து, யுவான் வாங் -5 கப்பல் ஜூலை 14 ஆம் திகதி சீனாவிலிருந்து புறப்பட்டது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கு தெரியாமல் இந்த கப்பலுக்கு இலங்கை அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, 24 நாட்கள் கடலில் பயணித்த இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைய 3 நாட்கள் இருக்கும் நிலையிலேயே, வரும் திகதியை தாமதப்படுத்துமாறு கடந்த 8 ஆம் திகதி சீனா தூதரகம் ஊடாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.…
The post சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு; இலங்கையிலிருந்து நீங்க தயாராகும் தூதரகங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு; இலங்கையிலிருந்து நீங்க தயாராகும் தூதரகங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
