இலங்கையில் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்; CPJ விடுத்துள்ள எச்சரிக்கை
7 view
இலங்கையின் பாதுகாப்பு படையினர் பத்திரிகையாளர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் குறித்து அதிகாரிகள் முழுமையான துரித விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு எக்ஸ்போஸ் நியுசின் பணியாளர்களை துன்புறுத்துவதை அதிகாரிகள் நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜூலை 22 ம் திகதி அதிகாலை தனியார் டிஜிட்டல் செய்திதளமான எக்ஸ்போஸ் நியுசின் மூன்று பத்திரிகையாளர்கள் உட்பட நான்கு பத்திரிகையாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதலை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதி மீதான பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கை குறித்தும் பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்தும் செய்திசேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே தாக்கப்பட்டனர் என சிபிஜேயுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட இந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட மூன்று பத்திரிகையாளர்களை தேடி 27 ம் திகதி எக்ஸ்போசர் நியுசின் அலுவலகத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர் என அந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். தொடரும் பொருளாதார அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் மூண்டுள்ளன,…
The post இலங்கையில் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்; CPJ விடுத்துள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்; CPJ விடுத்துள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
