இன்று முதல் ரயில் கட்டணத்தில் திருத்தம்

40 view
இன்று முதல் திருத்தப்பட்ட ரயில் கட்டணம் அமுலாவதாக, ரயில் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், சில பிரச்சினைகள் காரணமாக, தொடருந்து கட்டண திருத்தத்தை அமுலாக்க முடியாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய கட்டண திருத்தத்துக்கு அமைய, 10 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த கட்டணம், 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்புக்கான ஆகக்குறைந்த கட்டணம், 50 ரூபாவாகவும், முதலாம் வகுப்புக்கான ஆகக்குறைந்த கட்டணம் 100 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்புக்காக, முதல் 10 கிலோமீற்றர்களுக்குள், ஒரு கிலோமீற்றருக்கு, 2 ரூபா 60 சதமும், இரண்டாம் வகுப்புக்காக 5 ரூபா 20 சதமும், முதலாம் வகுப்புக்காக, 10 ரூபா 40 சதமும் என தொடந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டண உயர்வை, இன்று முதல் தொடருந்து நிலையங்களில் காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், போக்குவரத்து அமைச்சு தீர்மானித்ததன் அடிப்படையில், இன்று முதல் ரயில் கட்டணத்தை அதிகரிக்க…
The post இன்று முதல் ரயில் கட்டணத்தில் திருத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース