ஷிகர் தவான் அபாரம்: மே.தீவுகள் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி!
5 view
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி, 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது. ட்ரினிடெட் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 307 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷிகர் தவான் 97 ஓட்டங்களையும் சுப்மான் கில் 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அல்சார்ரி ஜோசப் மற்றும் மோட்டீ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரொமாறியோ செப்பர்ட் மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 308 என்ற வெற்றி இலக்கை நோக்கி…
The post ஷிகர் தவான் அபாரம்: மே.தீவுகள் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஷிகர் தவான் அபாரம்: மே.தீவுகள் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
