ரணிலைக் கண்டபடி விமர்சிக்காமல் தந்திரோபாயமாக அணுகவேண்டும் – முன்னாள் எம்.பி. சிறிநேசன் வேண்டுகோள்!
6 view
“தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதைச் சிந்திப்பதைவிடுத்து இப்போது தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கண்டபடி விமர்சித்துக் கொண்டு அல்லது போராடிக்கொண்டிருப்பதில் அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்த் தரப்பினர் தந்திரோபாயமான முறையில் ஜனாதிபதியை அணுகி கருமங்களை ஆற்றவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார் மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஜனநாயக ரீதியான போராட்டத்தை நாங்கள் வரவேற்கின்றோம். போராட்டக்காரர்கள் நியாயமாக என்ன கோரிக்கையை முன்வைக்கின்றார்களோ அதை நிறைவேற்றுவதுதான் புத்திசாதுரியமானது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்க்கமான முறையில் சிந்தித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். தற்போது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இனி அடுத்ததாக தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் எவ்வாறு…
The post ரணிலைக் கண்டபடி விமர்சிக்காமல் தந்திரோபாயமாக அணுகவேண்டும் – முன்னாள் எம்.பி. சிறிநேசன் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலைக் கண்டபடி விமர்சிக்காமல் தந்திரோபாயமாக அணுகவேண்டும் – முன்னாள் எம்.பி. சிறிநேசன் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
