புதிய அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் வெளியான தகவல்
6 view
புதிய அமைச்சரவை நியமனங்கள் இன்று பிற்பகல் வழங்கப்படவுள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக தினேஸ் குணவர்த்தன பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவையும் இன்று நியமிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், இன்று மதியம் ஒரு மணியளவில் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இது இடைக்கால அமைச்சரவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வக்கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்காக ஏனைய அரசியல் கட்சிகளுடன் தற்போது பேச்சுக்கள் நடத்தப்பட்டுவரும் நிலையில், இதற்கு இணக்கப்பாடோன்று எட்டப்படும்வரையில் இந்த அமைச்சரவை செயற்படும் எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிறசெய்திகள்
The post புதிய அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
