ஜனாதிபதி செயலக சம்பவம் – விசாரணைகளுக்கு விசேட குழு நியமனம்!

15 view
ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் அதற்கான சாட்சியங்களைப் பெறுவதற்காக குற்றத்தடுப்பு அதிகாரிகள் மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப் பேச்சாளர், இதனை தெரிவித்துள்ளார். இந்த குழு மத்திய கொழும்பு காவல்துறை அத்தியட்சகரின் (SSP) மேற்பார்வையின் கீழ் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முப்படையினர், காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று அதிகாலை ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதான நுழைவாயில் உள்ளிட்ட வளாகங்களில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றிய வேளையில் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் களனி, எம்பிலிப்பிட்டிய, ஜாஎல, இரத்தினபுரி, வெல்லம்பிட்டிய, வாதுவ, நுகேகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கொழும்பு  சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் மேற்பார்வையில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிறசெய்திகள்
The post ஜனாதிபதி செயலக சம்பவம் – விசாரணைகளுக்கு விசேட குழு நியமனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース