கந்தளாயில் 521லீற்றர் டீசலை தம்புள்ளைக்கு கொண்டு சென்ற ஒருவர் கைது!
17 view
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 521லீற்றர் டீசலை லெறியொன்றில் கொண்டு சென்ற ஒருவரை கந்தளாயில் வைத்து கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் தெரிவித்தார். நேற்றிரவு (வியாழக்கிழமை) கைது செய்துள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார். தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் தெரிவித்தார். சந்தேக நபர் சட்டவிரோதமான முறையில் கந்தளாய் பிரதேசத்தில் என்னூற்றி ஐம்பது ரூபாயிக்கு வாங்கி தம்புள்ளை பகுதிக்கு கூடுதலான விலைக்கு விற்பதற்காக சிறிய லொறியொன்றில் கொண்டு சென்ற போதே கந்தளாய் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் டீசலை கொண்டு செல்வதற்காக பயன்படுத்திய லொறி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து…
The post கந்தளாயில் 521லீற்றர் டீசலை தம்புள்ளைக்கு கொண்டு சென்ற ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கந்தளாயில் 521லீற்றர் டீசலை தம்புள்ளைக்கு கொண்டு சென்ற ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
