போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் கொடூர தாக்குதல்; பல்வேறு தரப்பினர்களும் கடும் கண்டனம்!
40 view
அரசாங்கத்திற்கு எதிராக காலி முத்திடலில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு படையினர் அந்த பகுதியில் இருந்து போராட்டகாரர்களை வெளியேற்றியுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்தது. ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், நேற்றைய தினம் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற நிலையில், நேற்று இரவு காலி முகத்திடல் போராட்ட களத்திற்கு வந்த படையினர் அங்கிருந்த போராட்டகாரர்களை விரட்டியடித்தனர். அத்துடன், கூடாரங்களையும் அகற்றியெறிந்தனர். மேலும் போரட்டகளத்தில் இருந்த முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், சர்வதேச ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். சாரா ஹல்டன் “காலி முகத்திடல் போராட்ட களத்தில் இருந்து வரும் செய்திகள் குறித்து மிகவும் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவத்துள்ளார். அத்துடன், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான…
The post போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் கொடூர தாக்குதல்; பல்வேறு தரப்பினர்களும் கடும் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் கொடூர தாக்குதல்; பல்வேறு தரப்பினர்களும் கடும் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
