கொழும்பில் பதற்றம்; இரவோடு இரவாக இராணுவம் வெறியாட்டம்! (படங்கள் இணைப்பு)

6 view
இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறாத வண்ணம் கோட்டா கோ கம பகுதியை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், கோட்டா கோ கம பகுதிக்கு தற்போது பொலிஸ் உயரதிகாரிகளின் பாதுகாப்புடன் துப்பரவுப்பணியாளர்கள் அழைத்து வரப்பட்டு எஞ்சியிருக்கும் கூடாரங்கள் மற்றும் தடயங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது போராட்டக்களத்திலிருந்த சட்டத்தரணி ஒருவர் உட்பட 10 போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், காலிமுகத்திடல் பகுதிக்கு சிவில் உடையணிந்த இராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோர் வருகை தந்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் நூற்றுக்கணக்கானோர் திடீரென நுழைந்துள்ளமையினால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோட்டா கோ கம…
The post கொழும்பில் பதற்றம்; இரவோடு இரவாக இராணுவம் வெறியாட்டம்! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース