நாளைய மின்தடை விபரம்
8 view
நாட்டில் நாளைய தினம் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி முதல் 8.30 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது. இதுதவிர, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிறசெய்திகள்
The post நாளைய மின்தடை விபரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளைய மின்தடை விபரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
