இந்தியாவின் பெயரை பாவித்து டளசுக்கு வாக்களிக்க தீர்மானித்தமை கண்டனத்துக்குரியது!மாவை கடும் சீற்றம்
5 view
எழுபது ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கவலை வெளியிட்டார். சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற கூட்டம் இடம்பெற்றபோது அங்கு சென்ற டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் எழுத்து மூலம் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நான் அந்த நிகழ்வுக்கு போக முடியவில்லை. இந்த விடயம் இரவோடு இரவாக ஊடகங்களுக்கு செய்திகளாக சென்றிருக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் நடக்கின்ற நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாக பிளவுப்பட்டு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று செய்தியை இரவில் தெரியப்படுத்தும் நிலை…
The post இந்தியாவின் பெயரை பாவித்து டளசுக்கு வாக்களிக்க தீர்மானித்தமை கண்டனத்துக்குரியது!மாவை கடும் சீற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவின் பெயரை பாவித்து டளசுக்கு வாக்களிக்க தீர்மானித்தமை கண்டனத்துக்குரியது!மாவை கடும் சீற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
