ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு போராட்டக்காரர்களிடம் அப்துல்லா கோரிக்கை
16 view
புதிய ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் ரணிலுக்கு காலிமுகத்திடல் போராட்டக்காரார்கள் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார். கிண்ணியாவில் அவரது இல்லத்தில் இன்று (21) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கோட்டாபயவின் பதவி விலகலின் பின் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியவுடன் அவர் மறுநாள் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் 57 நாடுகளின் தூதுவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி உதவிகளை நீண்டகால அடிப்படையில் பெறுவது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளார். இவ்வாறாக சிறந்ததொரு தலைமைத்துவமாக சர்வதேசமும் இவரை ஏற்றுள்ளது. இது போன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவின் பின் அவர் சஜித், மகிந்த, மைத்திரி போன்றவர்களிடமும் இணைந்து செயற்படுமாறும் கோரிக்கை விடுத்திருப்பது நாட்டை கட்டியெழுப்ப சிறந்த நிலையாக உள்ளது. 113…
The post ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு போராட்டக்காரர்களிடம் அப்துல்லா கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு போராட்டக்காரர்களிடம் அப்துல்லா கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
