டக்ளசுக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு ரணில் மனிதாபிமானம் இல்லாதவரா?-குணாளன் கேள்வி
14 view
ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தவுக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனிதாபிமானம் இல்லாதவரா ? உணர்வு இல்லாதவரா ? தீவக சிவில் சமூக பொருளாளர் கருணாகரன் குணாளன் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரணிலை அழைத்துச்சென்றவரை படுகொலை செய்ய முயற்சித்த ஈபிடீபி துணைக்குழு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட வேளையில் நெடுந்தீவு மக்கள் பல கொடூர துன்பங்களை அனுபவிக்க நேரிட்டது . 12 வயது சிறுமியொருவர் ஈபிடீபி பிரமுகரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்டிருந்தார் . இதுபோன்ற தினமும் பல்வேறு கொடூரங்கள் ஈபிடீபியினரால் அந்த தீவிலே அரங்கேற்றப்பட்டுவந்தன . தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உட்பட மகிந்த அரசுக்கெதிரான எந்த கட்சிகளும் அங்கு செல்லவே முடியாத நிலை காணப்பட்டது . இந்நிலையில் நெடுந்தீவுக்கு நேரடியாக சென்று மக்களின் துயரங்களை பார்வையிடுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது . முன்னாள் பிரதமரும் , நாட்டின்…
The post டக்ளசுக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு ரணில் மனிதாபிமானம் இல்லாதவரா?-குணாளன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டக்ளசுக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு ரணில் மனிதாபிமானம் இல்லாதவரா?-குணாளன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
