அனைத்துத் திருடர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியாக ஒருவரை நியமித்துள்ளனர்! மத்துமபண்டார சாடல்

16 view
அனைத்துத் திருடர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியாக ஒருவரை நியமித்துள்ளார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றில் நேற்று மக்களின் நிலைப்பாடு தானா வெளிப்பட்டது என கேட்க விரும்புகிறேன்? 2019 மற்றும் 2020 இல் இருந்த நிலைப்பாட்டிலிருந்து மக்கள் முற்றாக மாறிவிட்டார்கள். 2020 இல் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, குறித்த உறுப்பினர்களினாலேயே புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருடர்களை வெளியே விரட்ட வேண்டும் என கோரியே மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால், இன்று அனைத்துத் திருடர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியாக ஒருவரை நியமித்துள்ளார்கள். இவர்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கவே முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புதிய ஜனாதிபதி தெரிவின்போது, எமது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் என கூறப்படுகிறது. ஆனால்,…
The post அனைத்துத் திருடர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியாக ஒருவரை நியமித்துள்ளனர்! மத்துமபண்டார சாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース