இரண்டு நாட்களாக பிணவறையில் பிரபல நடிகரின் உடல்
42 view
கேரளா,ஜுலை 20 கேரளாவில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த பழம்பெரும் நடிகரின் உடலை வாங்க குடும்பத்தினர் முன்வராத நிலையில் அரசு சார்பில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகில் நடிகராக வலம் வந்தவர் ராஜ் மோகன்(90). இவர் கடந்த 1967ஆம் ஆண்டு வெளியான இந்துலேகா என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை கலா நிலையம் கிருஷ்ணன் நாயர் என்பவர் இயக்கி இருந்தார். இதன்பின்னர் ஏராளமான மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வந்தார். இயக்குனர் கலா நிலையம் கிருஷ்ணன் நாயரின் மகளை திருமணம் செய்துகொண்ட இவர், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று, பின்பு ஆதரவற்றோர் இல்லத்தில் சுமார் 20 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜ் மோகன் கடந்த ஞாயிற்று கிழமை உயிரிழந்த நிலையில், உறவினர்களுக்கு…
The post இரண்டு நாட்களாக பிணவறையில் பிரபல நடிகரின் உடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரண்டு நாட்களாக பிணவறையில் பிரபல நடிகரின் உடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
