யாழில் ஹெரோயினை ஊசி மூலம் எடுத்துக் கொண்ட இளைஞன் பலி
49 view
ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இளைஞனின் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பெறப்பட்ட சலம் மாதிரியில் போதைப்பொருள் நேர்மறை அறிக்கை கிடைத்துள்ளது. இளைஞனின் சடலம் நாளை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அண்மைய காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையினால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. பிறசெய்திகள்
The post யாழில் ஹெரோயினை ஊசி மூலம் எடுத்துக் கொண்ட இளைஞன் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் ஹெரோயினை ஊசி மூலம் எடுத்துக் கொண்ட இளைஞன் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
